-
25,000 ரூபாய் நிவாரணம் கிடைக்கவில்லை; யாழ்ப்பாண மாணவன் முறைப்பாடு

அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 25,000 ரூபாய் கொடுப்பனவு, வெள்ளத்தில் சிக்குண்ட தமது வீடு புறக்கணிக்கப்பட்டு விட்டதாக மாணவன் ஒருவர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாட்டை பதிவு செய்திருந்தார். குறித்த முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகம், “அரசாங்கத்தின் 25,000 ரூபா நிவாரணத் தொகை வீட்டுக்கானதா அல்லது தனி நபருக்கானதா” என்ற விளக்கத்தை இரு நாட்களுக்குள் எழுத்து மூலம் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு சண்டிப்பாய் பிரதேச செயலாளரை கேட்டுக்…
-
விபத்தை ஏற்படுத்திய சபாநாயகர் அசோக ரங்வல கைது

சப்புகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் முன்னாள் சபாநாயகர் அசோக ரங்வல எம்.பி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து நடந்தபோது நாடாளுமன்ற உறுப்பினர் ரங்வல, மதுபோதையில் இருந்ததாகக் கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் கூற்றுகள் பொலிஸ் விசாரணைகளைத் தொடர்ந்து பொய்யானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. விபத்துக்குப் பிறகு ரங்வல, கொழும்பில் உள்ள தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவதாக மாநில ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன. சபுகஸ்கந்தாவின் டெனிமுல்லா பகுதியில் வியாழக்கிழமை மாலை…
-
3 காதலிகளுக்காக திருடிய 18 வயது காதலன்

தனது காதலிகளுக்கு பரிசுகளை வழங்கவும், ஆன்லைனில் பணத்தை முதலீடு செய்யவும் திருட்டில் ஈடுபட்ட 18 வயது இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது உறவினர் ஒருவரின் வீட்டில் இருந்து திருடப்பட்ட 61 இரத்தினகற்கள் அவரது வசம் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். திருடப்பட்ட பணத்தை பயன்படுத்தி, 27 வயதான மூன்று குழந்தைகளின் தாயாகிய பெண்ணிற்கும், டிக்டொக் மூலம் அறிமுகமான மேலும் இரண்டு காதலிகளுக்கும் கையடக்கத் தொலைபேசிகள் வாங்கி…
-
இலங்கையில் கொடூரம்; காதலியை நண்பர்களுக்கு விருந்தளித்த காதலன்

வெலிவேரிய பகுதியில் உள்ள ஒரு விடுதிக்கு தனது காதலியை அழைத்துச் சென்று, ‘ஐஸ்’ என்ற போதைப்பொருளைக் குடிக்கக் கட்டாயப்படுத்தி, பின்னர் தனது ஐந்து நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் ஒரு பாரதூரமான சம்பவம் பதிவாகியுள்ளது. இந்தக் குற்றத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்ய வெலிவேரிய காவல்துறையின் குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியவை தற்போது விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளன. 8 ஆம் திகதி இரவு 10.00…
-
கர்ப்பிணி பெண்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை மற்றும் வரவிருக்கும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கர்ப்பிணி பெண்களுக்கு 5,000 ரூபா பெறுமதியான போஷாக்குக் கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 2025 நவம்பர் 30 ஆம் திகதி வரை தாய் சேய் நல நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு முறை மட்டும் இக்கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் உள்ள முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தின் ஒரு திட்டமாக, இந்தக் கொடுப்பனவு டிசம்பர் 16…
-
அரசியல் இலாபத்திற்காக மக்களை ஏய்க்கும் அர்ச்சுனா எம்பி; கடும் எச்சரிக்கை

யாழ்ப்பாணம் தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றுவதற்காக மக்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளை,அரசியல் இலாபத்திற்காக அந்த மக்களை அர்ச்சுனா எம்பி தவறாக வழிநாத்துவதாக வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதி பதினெட்டு பேருக்கு சொந்தமான காணிஅந்தக் காணிக்கு உரித்தானவர்கள் வடபகுதியில் தற்போதும் இருக்கிறார்கள்.யாழ்ப்பாணம்,வுனியா,கொழும்பு உட்பட தையிட்டி காணிக்கு சொந்தமான 18 பேர் இலங்கையில் உறுதியோடு இருக்கிறார்கள்.தையிட்டி போராட்டம் தொடர்ச்சியாக இடம் பெற்று…
-
பகிடிவதை ; யாழ் பல்கலை மாணவர்கள் 19 பேர் விளக்கமறியல்

பகிடிவதை புரிந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேரின் விளக்கமறியல் காலம் நாளை (12) வரை நீடிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்திற்குள் வெளியே உள்ள வீடொன்றுக்கு கனிஷ்ட மாணவர்களை அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்டதாக யாழ் பல்கலைக்கழத்தின் 19 சிரேஸ்ட மாணவர்களை கடந்த மாதம் 29ம் திகதி கோப்பாய் பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில்…
-
யாழில் நிவாரண நிதி புறக்கணிப்பு ; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

யாழில் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டோருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரண நிதியில் புறக்கணிப்பு இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குறித்த நிவாரண நிதிக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும் அதனை நடைமுறைப்படுத்தும் அதிகாரியினால் தமது தாய் புறக்கணிக்கப்பட்டதாக கூறி நேற்று (10) சண்டிலிப்பாய் – கல்லுண்டாய் பகுதியில் உள்ள ஒருவர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண கிளையில் முறைப்பாடு ஒன்றை கையளித்திருந்தார். கிராம சேவையாளர் ஒருவருக்கு எதிராகவே இந்த முறைப்பாடு பதிவு…
-
மன்னாரில் வெள்ள நீர் பள்ளத்தில் விழுந்த உயர்தர மாணவன் உயிரிழப்பு

வெள்ள நீர் பாய்ந்ததால் ஏற்பட்ட 15அடி ஆழமான பள்ளத்தில் தவறுதலாக மூழ்கிய கற்கிடந்த குளம் பகுதியை சேர்ந்த முருங்கன் மத்திய கல்லூரி (18)வயது உயர்தர மாணவன் அகிலன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் அனர்த்த பிதேசங்களுக்கு செல்வோர் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
மலைய மக்களை வடக்கிற்கு அழைக்கும் சுமந்திரன்

வடக்கு, கிழக்கில் குடியேற வருமாறு மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம்.” இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசு பாதுகாப்பான காணி தர மறுத்தால் வடக்கு, கிழக்கில் குடியேற மலையக மக்கள் விருப்பம் என்ற மனோ கணேசனின் அறிவித்தலை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்தே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். “ கடந்த வாரம் கண்டி, கம்பளைக்கு உங்களோடு சென்ற போது மலையகத்தில் இருந்து வடக்கு கிழக்கிற்கு வந்து குடியேறுமாறு எமது தமிழ் உறவுகளை…
