பள்ளிப்படிப்பை முடிக்காதவர்களை விட முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு குறைவாக இருப்பதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் படித்து முடித்தவர்களின் எண்ணிக்கை 29.1% ஆக உள்ளது . ஆனால் வேலை இல்லாமல் இருக்கும் படிக்காத இளைஞர்களின் எண்ணிக்கை விட 3.4 % அதிகமாகும் . உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் வேலையின்மை என்பது அதிக அளவில் உள்ளது . கடந்த 2000ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் 15 முதல் 29 வயது வரையிலான வேலையில்லா இளைஞர்களின் எண்ணிக்கை 88.6%-ல் இருந்து 82.9 %ஆக குறைந்துள்ளது . ஆனால் அதே வேலை இல்லாத படித்த பட்டதாரிகளின் எண்ணிக்கை 54 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்ந்துள்ளது .
இதை ஆய்வு செய்த சர்வதேச தொழிலாளர் அமைப்பு கிராமப்புறங்களை விட நகரப்புறங்களில் வேலையின்மை அதிகரித்துள்ளதாகவும் , உலக அளவில் பார்க்கையில் இந்தியாவில் தான் மிகக் குறைந்த அளவில் பெண்கள் வேலை செய்கின்றனர் என தெரிவித்துள்ளது .
படித்தவர்களை விட படிக்காதவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகம்…!

Visited 33 times, 1 visit(s) today