செம்மணி – சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் 22 எலும்புக்கூடுகள்


யாழ்ப்பாணம் – செம்மணி – சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

அதன்படி, இன்றைய தினம் அங்கிருந்து குழந்தையொன்றின் எலும்புக்கூடு உட்பட 3 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இதுவரை செம்மணி – சிந்துபாத்தி மனிதப் புதைகுழியிலிருந்து 22 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை, நேற்றைய தினம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் சிந்துபாத்தி மனிதப் புதைகுழியை நேரில் சென்று பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Visited 17 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *