3-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் மரணம்


கர்நாடகாவில் உள்ள சாம்ராஜ்நகரில் 3-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் வகுப்பறையிலே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள பதனகுப்பேவை சேர்ந்தவர் லிங்கராஜூ (36). இவரது மகள் தேஜஸ்வினி (8). அங்குள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.

அவர் நேற்று முன் தினம் காலை 11.30 மணியளவில் வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்தார். ஆசிரியர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு மாணவியை கொண்டு சென்றனர்.

அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

8 வயதே ஆன‌ மாணவி தேஜஸ்வினி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பதனகுப்பேவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமது ஒரே மகளை இழந்த பெற்றோர் கதறி அழுத காட்சி அனைவரையும் கண் கலங்க வைத்தது.

Visited 2 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *