மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் காணாமல் போயிருந்த 4 வயதான தினேஷ் ஹம்சின் என்ற சிறுவன் இன்றையதினம் (17-01-2025) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தலவாக்கலை பொலிஸாரும், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் பாதுகாப்பு அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்த தேடுதலின் போதே சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குடும்பத் தகராறு காரணமாக தனது 4 வயது மகனுடன் தாயொருவர், தற்கொலை செய்துகொள்ளும் நோக்குடன் தலவாக்கலை, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் (16-01-2025) நேற்று மாலை குதித்திருந்தார்.
இதனையடுத்து தாய் அன்றையதினமே மீட்கப்பட்டு லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுவன் காணாமல் போயிருந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மரண விசாரணைகளின் பின் சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
