கொழும்பு, ஜெம்பெட்டா வீதியில் அமைந்துள்ள 95ஆம் தோட்டப் பகுதியில் சீரற்ற வானிலையால் பாதிப்புக்குள்ளான ஐந்து வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.
கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அந்த பகுதி பாதுகாப்பு அபாயத்தில் இருந்த நிலையில், அங்கு வசித்திருந்த குடும்பங்கள் முன்கூட்டியே இடைத் தங்கல் முகாம்களுக்கு மாற்றப்பட்டிருந்ததால், உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. வீடுகள் மட்டுமே முழுமையாக சேதமடைந்துள்ளன.
Visited 7 times, 1 visit(s) today
