டெல்லியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 5 பயங்கரவாதிளை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து வெடிகுண்டு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட உதிரிப் பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று டெல்லி காவல்துறை தெரிவித்தது.
கைது செய்யப்பட்டவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆல் ஈர்க்கப்பட்டு ஒரு பெரிய பயங்கரவாத தாக்குதலைத் திட்டமிடுவதில் ஈடுபட்டிருந்தனர் என்றும் கைது செய்யப்பட்டர்களில் பலர் இரசாயன குண்டுகள் தயாரிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், டெல்லி, மும்பை, ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம் மற்றும் ஹைதராபாத்தில் பொலிஸார் தீவிர சோதனையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
Visited 3 times, 1 visit(s) today
