பழமையான காதல் கடிதம் கண்டுபிடிப்பு…!


அமெரிக்காவில் மேரி கிரிப்ஸ் என்ற பெண்ணிற்கு ராணுவ அதிகாரி ஒருவர் இந்த கடிதத்தை  எழுதியுள்ளதாக தெரியவந்துள்ளது .
அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் மாகாணத்தை சேர்ந்த ரிக் ட்ரோஜனோவ்ஸ் என்பவர் . கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு பழைய பெட்டியை  ஏலத்தில் வாங்கியுள்ளார் .   ஏலத்தில் வாங்கிய பெட்டியில் ஒரு 70 ஆண்டுகள் பழமையான காதல் கடிதம் ஒன்று  இருந்துள்ளது .  அந்த காதல் கடிதத்தை தனது காதலிக்காக இர்வின் பிளெம்மிங்  என்பவர் எழுதியுள்ளார் .  மேலும் இவர் ஒரு ராணுவ அதிகாரி என்பதும் தெரிய வந்துள்ளது . கடிதத்தை மேரி கிரிப்ஸ் என்ற பெண்ணிற்கு  எழுதியுள்ளார் . அடிக்கடி சான் பிரான்சிஸ்கோவில் இருந்து கடிதம் வந்துள்ளது என்றும் அந்த  கடிதத்தில் “ கடந்த கால சண்டைக்காக மன்னிப்பு கேட்கிறேன் .  விரைவில் நான் வந்து உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்”  இவ்வாறு கடிதத்தில் எழுதியுள்ளது . அதுமட்டுமின்றி கடிதத்தை உரியவரிடம் சேர்ப்பதற்கான முயற்சியில் தற்போது ட்ரோஜனோவ்ஸ் இறங்கியுள்ளார் . 

Visited 9 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *