சென்னை துப்புரவு பணியாளர்களின் போராட்டத்தில் பாடகி சின்மயி


சென்னை மாநகராட்சி துப்புரவு பணிகளை, தனியாருக்கு வழங்கியதற்கு எதிப்பு தெரிவித்து, துப்புரவு பணியாளர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த 6 நாட்களாக துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், சென்னையின் பல இடங்களில் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த போராட்டத்தில், 500 லீட்டர் தண்ணீர் போத்தல்களுடன் பிரபல பாடகி சின்மயி கலந்துக்கொண்டார்.

தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், தங்களை நிரந்தரமாக பணியமர்த்த வேண்டும் என்ற துப்புரவு பணியாளர்களின் கோரிக்கைக்கு சின்மயி ஆதரவு தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Visited 7 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *