இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தினம் இன்று 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கையின் பல பகுதிகளிலும் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், கொழும்பில் நடைபெற்ற முக்கிய நிகழ்வு இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான ‘இந்திய இல்லம்’ இல் நடைபெற்றது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாஇந்திய தேசியக் கொடியை ஏற்றி வணக்கத்தை செலுத்தினார்.
அணிவகுப்பு மரியாதையில் கலந்துகொண்டதுடன் 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவரின் உரையின் சில பகுதிகளைவும் வாசித்தார்.
Visited 3 times, 1 visit(s) today
