தமிழக மூகாமில் இருந்து தாயகம் தப்பி வந்த இலங்கை குடும்பம்


தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மீண்டும் கடல் வழியாக இலங்கைக்கு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு நாடு திரும்பிய அவர்கள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் , அவர்களை பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் அவர்களை மன்று பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.

மன்னாரைச் சேர்ந்த இவர்கள் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக கடல் வழியாக படகில் சென்று தமிழகத்தில் அடைக்கலம் கோரிய நிலையில் நீண்ட நாட்களாக முகாமில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் தமிழ் நாட்டில் இருந்து படகில் புறப்பட்டு மன்னார் பேசாலை கடற்பரப்பை வந்தடைந்தவர்கள், தாமாகவே பேசாலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

அதனை அடுத்து அவர்களை பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்திய போது நால்வரையும் பிணையில் செல்ல மன்று அனுமதித்தது.

Visited 6 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *