வாழைச்சேனையில் கணவனை கொன்ற மனைவியால் அதிர்ச்சி


வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியால் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கணவன் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் இன்று (15) வாகனேரி குடாமுனைகல் பகுதியில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் 4 பிள்ளைகளின் தந்தையான வைரமுத்து நவராசா எனும் 46 வயதானவர்.

மனைவி வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். உயிரிழந்தவர் வயல் காவல் கடமையில் ஈடுபடுபவர் என்றும் அன்றைய தினம் வயலுக்கு சென்று வீடு திரும்பியதும் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர் .

குறித்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Visited 3 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *