யாழ் அல்லப்பிட்டி இளைஞன் மரணம்; வீதியில் சவப்​பெட்டியுடன் ஆர்ப்பாட்டம்


யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் வைத்து ஊர்காவற்றுறை பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் இறுதிக் கிரியைகள் வட்டுக்கோட்டை – சித்தங்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை (12) அன்று இடம்பெற்றது.

அதன் பின்னர் பதாகைகளை தாங்கியவாறு சவப்​பெட்டியுடன் வந்த உறவுகள் வீதியில் இருந்து “பொலிஸாரை கைது செய், எமது பிள்ளைக்கு நீதி வேண்டும், பொலிஸாரின் அராஜகம் தொடர்கிறது” என கோஷமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேவேளை அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கோரி போராட்டங்களை முன்னெடுக்க வேண்டாம் என வட்டுக்கோட்டை பொலிஸார் மறைமுக அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக உயிரிழந்தவ்ர்களின் உறவினர்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Visited 2 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *