தென் அமெரிக்கா நாடான பிரேசிலில் கடந்த 4 மாத காலமாகவே டெங்கு காய்ச்சலை பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் 4 மாதங்கள் கணக்கெடுப்பின்படி 40 லட்சம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பரவியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வருடம் இதே போல் டெங்கு காய்ச்சலின் பாதிப்பானது உச்சநிலையை அடைந்துள்ளது. 10 லட்சம் பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. அதைவிட இந்த வருடம் 4 மடங்கு அதிகரித்து உள்ளதாகவும் புள்ளி விவரம் தெரிவித்துள்ளது.
இதை தொடர்ந்து பரிதாபமாக 2000 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசாங்கம் பல முயற்சிகளை தீவிரமாக எடுத்த நிலையிலும் டெங்கு காய்ச்சல் ஆனது கட்டுக்குள் அடங்காமல் மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. இறந்தபோதிலும் தற்பொழுது அரசாங்கம் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர முயற்சி மற்றும் விழிப்புணர்வை எடுத்து வருகிறது.
