கேரள நடிகர் சங்கத்தின் தலைவர் பதவியை நடிகர் மோகன்லால் இராஜினாமா செய்துள்ளார்.
இவருடன் சேர்ந்து அச்சங்கத்தின் 17 நிர்வாகிகளும் இராஜினாமா செய்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மலையாள திரையுலகில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் இருப்பதாக கேரள அரசு நியமித்த குழு அறிக்கை அளித்துள்ளது.
இதேவேளை மலையாள திரைத்துறையில் நடிகர்கள், இயக்குநர்கள் மீது இதுவரை 8 நடிகைகள் பாலியல் புகார் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் பின்னணியிலேயே நடிகர் மோகன்லால் உள்ளிட்ட 17 பேர் இராஜினாமா செய்துள்ளனர்.
Visited 43 times, 1 visit(s) today
