தமிழ் சினிமாவில் எண்ணற்ற வெற்றி திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் வெங்கட் பிரபு. இயக்குனர் மட்டும் அல்லாமல் சமுத்திரகனி இயக்கத்தில் உன்னை சரணடைந்தேன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாகவும் வெங்கட் பிரபு நடித்துள்ளார். உன்னை சரணடைந்தேன் படத்தை தொடர்ந்து ஒரு சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது நடிகர் ரஜினி நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இதைத் தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களில் மாபெரும் வசூல் சாதனையும் படைத்துள்ளது. வேட்டையன் திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடிகர் ரஜினி நடித்துக் கொண்டிருக்கிறார். இத்திரைப்படம் அடுத்த வருட தீபாவளிக்கு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் மட்டும் அல்லாமல் மணிரத்தினம் மற்றும் மாரி செல்வராஜ் இயக்கத்திலும் ஒரு சில படங்கள் தற்போது நடித்துக் கொண்டிருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்தில் கோட் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படம் தமிழக சினிமாவில் மாபெரும் வெற்றியை தேடி தந்தது. இதைத் தொடர்ந்து நடிகர் ரஜினி சந்தித்து கதை கூறியுள்ளதாகவும் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் ரஜினி கூட்டணியில் விரைவில் படம் உருவாக இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
