முல்லைத்தீவில் தூக்குக்காவடி தடம்புரண்டு இருவர் காயம்


முல்லைத்தீவு, குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கலுக்கு தூக்குகாவடி கட்டப்பட்ட பகுதியுடன் உழவு இயந்திரப்பெட்டி தடம்புரண்டதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

14 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு குமுழமுனை கிராமத்தில் உள்ள கொட்டுக்கிணற்றுப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் நிகழ்வு திங்கட்கிழமை (14) இடம்பெற்றது.

குறித்த ஆலய தூக்குக்காவடி நேர்த்திகடனை நிறைவேற்ற குமுழமுனை கற்பக பிள்ளையார் ஆலயத்திலிருந்து கொட்டுக்கிணற்றுப் பிள்ளையார் ஆலயத்தை நோக்கிச் செல்ல இருந்த வேளை தூக்குக்காவடி கட்டப்பட்ட உழவியந்திர பெட்டி கற்பக பிள்ளையார் ஆலய வளாகத்தில் திடீரென குடைசாய்ந்ததனால் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.


அதனையடுத்து தூக்குக்காவடி எடுத்த இரு இளைஞர்களும் விபத்தில் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

Visited 4 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *