வீடொன்றிலிருந்து அழுகிய நிலையில் சடலம்


கொழும்பு – கெஸ்பேவ, படுவன்தர பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து நேற்று (28) இரவு அழுகிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இது பெண்ணொருவரின் சடலமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இவர் 8 மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கெஸ்பேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Visited 4 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *