கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையதனதிற்கு செல்லும் போது ஏற்பட்ட வாகன விபத்தில் இளம் குடும்பப் பெண் உயிரிழந்துள்ளார்.
நேற்று(16) அதிகாலை 3:00 மணியவில் அனுரதபுரதிற்கு அண்மையில் இவ் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது.
பாதெனிய நோக்கிப் பயணித்த வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மரம் மற்றும் தொலைபேசி கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் விபத்து சம்பவத்தில் ஏழாலை வடக்கு பகுதியைச் சேர்ந்த அகிலன் திவியா வயது 31என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் திருமணம் செய்து ஒரு வருடமான நிலையில் இவ் துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது வேனில் சாரதியும் அதில் பயணித்த இரண்டு பெண்கள் மற்றும் மூன்று ஆண்களும் காயமடைந்து தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இரண்டு பெண்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 31 மற்றும் 85 வயதுடைய இரண்டு பெண்கள் ஆவர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
