கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியில் பத்துஓயா பாலத்திற்கு அருகில் இன்று (12) அதிகாலை 3.30 மணி அளவில் தனியார் பேருந்து ஒன்று டிப்பர் லொறியுடன் மோதிய விபத்தில் 28 பேர் காயமடைந்தனர்.
இவர்கள், பொலன்னறுவை, மின்னேரியா மற்றும் ஹிங்குராங்கொட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக பொலன்னறுவை பொது மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.
அப்பகுதி மக்கள் பெரும் முயற்சி எடுத்து டிப்பர் லாரியின் சாரதியை மீட்டு பொலன்னறுவை பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.
Visited 5 times, 1 visit(s) today
