பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கில் கணவர் நிரபராதி என விடுதலை!


பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவரது கணவர் ஹேம்நாத் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2020 டிசம்பர் 9ஆம் திகதி பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா சென்னை பூந்தமல்லி அடுத்தநசரத்பேட்டையில் உள்ள ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில் மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக சித்ராவின் தந்தை, பொலிஸில் முறைப்பாடளித்தார்.

இதனையடுத்து, சித்ரா தற்கொலைக்கு அவரது கணவர் ஹேம்நாத் தான் காரணம் என கூறப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்ட நிலையில், பின்னர் பிணையில் வெளியே வந்தார்.

இந்நிலையில், கடந்த 25ம் திகதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஹேம்நாத் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், நானும் என் மனைவி சித்ராவும் சந்தோசமாக வாழ்ந்து வந்தோம். என் மனைவி சித்ரா இறந்த உடனே நானும் இறந்து விடலாம் என்ற நோக்கில் இருந்தேன். ஆனால் என் மனைவியை கொலை செய்தது நான் தான் என என்மீது பழி சுமத்தியவர்கள் முன் நான் குற்றம் செய்யாதவன் என்பதை நிருபிக்கவே உயிரோடு இருக்கிறேன் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பொலிஸார் சின்னத்திரை நடிகை சித்ராவுடன் தொழில் ரீதியாக தொடர்பில் இருந்த அரசியல், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் யார் என்பதை பட்டியலிட்டு தீவிரமாக விசாரித்தனர்.

இந்நிலையில் சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் நிரபராதி எனவும் இந்த வழக்கில் இருந்து அவரை விடுவித்துள்ளது.

Visited 56 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *