தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தமிழ் சினிமாவின் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்பொழுது புதிய வீடு ஒன்றை வாங்கி உள்ளார். அந்த புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் மிக வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருமணம் ஆகி சந்தோஷமாக அவர்களின் திருமண வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர் இவர்களுக்கு இரு மகன்கள் இருக்கிறார்கள் சமீபத்தில் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவருக்கு இடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
சமீபத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்துக்காக மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த செய்தியானது தனுஷ் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து தனுஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புது வீடு ஒன்றை வாங்கி கிரகப்பிரவேசம் செய்துள்ள புகைப்படமானது சமூக வலைதளங்களில் பரவியது. இப்பொழுது தனுஷிற்கு சவால் விடும் விதமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரம்மாண்டமான ஒரு வீட்டை வாங்கி இருப்பது சமூக வலைத்தளங்களில் மிக வைரலாக பேசப்பட்டு வருகிறது.
