GOAT பட வசூலை முறியடித்த அமரன் – எத்தனை கோடி வசூல் தெரியுமா..?


அமரன் திரைப்படம் இராணுவ வீரர்களின் உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. இது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உலகநாயகனின் ராஜ்கமல் ஃபிலிம் நிறுவனம் தயாரித்திருந்தது. இதனையடுத்து உண்மை கதாபாத்திரங்களை பிரதிபலிக்கும் வகையில் மறைந்த மேஜர் முகந்த் வரதராஜன் ஆக சிவகார்த்திகேயனும், அவரின் மனைவி இந்து   ரபேக்கா  கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்தனர்.

அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வெளிவந்த சிவகார்த்திகேயனின் அமரன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சிவகார்த்திகேயனுக்கு 

திரைஉலகில் ஒரு பெரிய மாற்றத்தை கொடுத்துள்ளது.

அமரன் படம் ரூபாய் 300 கோடிக்கு மேல் வசூல் வேட்டையை நடத்தியது

கேரளாவில் அமரன் படத்தின் இறுதி வசூல்

கேரளாவில் விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. இறுதியாக வெளிவந்த விஜயின் GOAT படம் நடத்திய வசூலை விட தற்போது வெளிவந்த சிவகார்த்திகேயனின் அமரன் படம் கேரளாவில் மட்டும் 13.85 கோடி ரூபாய் வசூல் வேட்டை நடத்தி இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது

விஜயின் படத்தை விட சிவகார்த்திகேயனின் படம் அதிக அளவுக்கு வசூல் வேட்டை செய்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

Visited 9 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *