பிள்ளையானின் மற்றுமொரு சகா கைது


பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் செய்ததாகக் கூறப்படும் கொலைகளில் முக்கிய துப்பாக்கிதாரியாகக் கருதப்படும் முகமட் ஷாகித் என்பவரை மட்டக்களப்பு காத்தான்குடியில் அவரது வீட்டில் வைத்து சிஐடி யினர் கைது செய்துள்ளனர்.

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்படு காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் பிள்ளையானை கொழும்பு – குற்ற விசாரணைப் பிரிவு (சிஜடி) யினர் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கடந்த ஏப்ரல் 7ஆம் திகதி சிஐடியினர் கைது செய்தனர்.

அவரிடம் தொடர்ந்து இடம்பெற்றுவரும் விசாரணையையடுத்து காத்தான்குடியைச் சேர்ந்தவரும் கடந்த காலத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இருந்து பிள்ளையானுடன் இணைந்து செயற்பட்ட 45 வயதுடைய முகமட் ஷாகித்தை சிஐடியினர் கைது செய்திருந்தனர்

Visited 2 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *