ஊடகவியலாளரை இழிவுபடுத்திய அர்ச்சுனா ராமநாதன்: ஊடக அமைப்புகள் மௌனம்


ஊடகவியலாளரை இழிவுபடுத்திய அர்ச்சுனா ராமநாதன்: ஊடக அமைப்புகள் மௌனம் காப்பது ஏன்?

​ஒரு மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு, செய்தி சேகரிக்க வந்த ஊடகவியலாளரை “பிச்சைக்காரன்” என்று தரம் தாழ்ந்த வார்த்தைகளால் விமர்சித்த அர்ச்சுனா ராமநாதனின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

​ஊடக சங்கங்களின் நடவடிக்கை என்ன?: சக ஊடகவியலாளர் ஒருவர் பொதுவெளியில் இழிவுபடுத்தப்பட்ட பிறகும், இலங்கையில் உள்ள ஊடக சங்கங்களும் அமைப்புகளும் ஏன் இன்னும் மௌனம் காக்கின்றன?

இந்த பாராளுமன்ற உறுப்பினர் மீது எடுக்கப்படப்போகும் சட்ட நடவடிக்கை என்ன?
​ஒன்றிணைய வேண்டிய நேரம் இனம், மொழி, மதம் எனப் பிரிந்து கிடக்காமல், ஒட்டுமொத்த ஊடகத்துறையினரும் ஒன்றிணைந்து இந்த அநாகரீகச் செயலுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். இன்று ஒருவருக்கு நடந்தது, நாளை உங்கள் அனைவருக்கும் நடக்கலாம்.

​சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் ஊடக சுதந்திரத்தைப் பற்றியும், மனித மாண்பைப் பற்றியும் பேசும் அரசு, ஒரு ஊடகவியலாளரை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசிய இந்த பாராளுமன்ற உறுப்பினர் மீது உடனடியாக விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊடகவியலாளர்கள் என்பவர்கள் சமூகத்தின் கண்கள். அவர்களைத் தரம் தாழ்த்துவது ஒட்டுமொத்த ஜனநாயகத்தையே கேலிக்குள்ளாக்குவதாகும்.
​அர்ச்சுனா ராமநாதன் பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை ஊடகங்கள் இவருக்குப் புறக்கணிப்பு வழங்க வேண்டும்!

Mithujan Thijakarasa

Visited 4 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *