தமிழர்களை இழிவுபடுத்தும் அருண் சித்தார்த் அலுவலகத்திற்கு தீவைப்பு


 

தமிழர்களை இழிவுபடுத்தும் அருண் சித்தார்த்தின் யாழ் அலுவலகம் இனம் தெரியாதோரால் தீவைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கட்சி அலுவலகம் ஒன்று அமைந்துள்ள கடைத்தொகுதிக்கு இனம் தெரியாத நபர்கள் தீ வைத்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தாவடி பகுதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகம் அமைத்துள்ள இரண்டு கடைகளை கொண்ட கடைத்தொகுதிக்கு இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை வேளை தீ வைக்கப்பட்டுள்ளது.

இரு நபர்கள் கதவுக்கு தீ மூட்டி விட்டு தப்பி செல்வது அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ளது.

பூட்டப்பட்டிருந்த இரும்பு கதவுகளுக்கே தீ வைக்கப்பட்டமையால் ,பெரியளவிலான சேதங்கள் ஏற்படவில்லை.

குறித்த கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரான அருண் சித்தார்த் என்பவர் கட்சி அலுவலகத்தை நடாத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Visited 5 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *