கிளிநொச்சி, கண்டாவளை பெரிய குளத்தில் குளிக்கச் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் புதன்கிழமை (29) அன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்,
பெரியகுளம் கண்டாவளையைச் சேர்ந்த கணேசமூர்த்தி ரமேஷ் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பெரிய குளம்பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் அப்பகுதியில் நடைபெற்ற ஆலயத் தீர்த்த திருவிழாவிற்கு சென்று, குளத்துக்கு குளிக்கச் செல்வதாக கூறி குளத்தில் பாய்ந்துள்ளார். சிலர் அவரை தூக்கி வெளியில் எடுத்த போதும் அவர் மீண்டும் குளத்தில் பாய்ந்து காணாமல் போயுள்ளார்.
இவரை பிரதேச மக்கள் நீண்ட நேரமாக தேடிய நிலையில் சம்பவ தினத்தன்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
மீட்கப்பட்ட சடலம் பிரேத பரி சோதனைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
