-
3 காதலிகளுக்காக திருடிய 18 வயது காதலன்

தனது காதலிகளுக்கு பரிசுகளை வழங்கவும், ஆன்லைனில் பணத்தை முதலீடு செய்யவும் திருட்டில் ஈடுபட்ட 18 வயது இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது உறவினர் ஒருவரின் வீட்டில் இருந்து திருடப்பட்ட 61 இரத்தினகற்கள் அவரது வசம் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். திருடப்பட்ட பணத்தை பயன்படுத்தி, 27 வயதான மூன்று குழந்தைகளின் தாயாகிய பெண்ணிற்கும், டிக்டொக் மூலம் அறிமுகமான மேலும் இரண்டு காதலிகளுக்கும் கையடக்கத் தொலைபேசிகள் வாங்கி…
-
இலங்கையில் கொடூரம்; காதலியை நண்பர்களுக்கு விருந்தளித்த காதலன்

வெலிவேரிய பகுதியில் உள்ள ஒரு விடுதிக்கு தனது காதலியை அழைத்துச் சென்று, ‘ஐஸ்’ என்ற போதைப்பொருளைக் குடிக்கக் கட்டாயப்படுத்தி, பின்னர் தனது ஐந்து நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் ஒரு பாரதூரமான சம்பவம் பதிவாகியுள்ளது. இந்தக் குற்றத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்ய வெலிவேரிய காவல்துறையின் குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியவை தற்போது விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளன. 8 ஆம் திகதி இரவு 10.00…
-
பகிடிவதை ; யாழ் பல்கலை மாணவர்கள் 19 பேர் விளக்கமறியல்

பகிடிவதை புரிந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேரின் விளக்கமறியல் காலம் நாளை (12) வரை நீடிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்திற்குள் வெளியே உள்ள வீடொன்றுக்கு கனிஷ்ட மாணவர்களை அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்டதாக யாழ் பல்கலைக்கழத்தின் 19 சிரேஸ்ட மாணவர்களை கடந்த மாதம் 29ம் திகதி கோப்பாய் பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில்…
-
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்குள் நுழைந்து கொள்ளை

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்குள் நுழைந்து பெறுமதியான பொருட்களை திருடியதாக கூறப்படும் 12 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை பிரதேசத்தில் உள்ள பொலிஸ் தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில், மக்கள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு தவிக்கும் நேரத்தில், அவர்களின் சொத்துக்களை திருடும் கும்பல்களுக்கு…
-
தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும்; தேரரை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் எனக் கூறிய குற்றச்சாட்டு தொடர்பில், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கைது செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ள அம்பிட்டிய சுமணரத்ன தேரரை, எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (08) பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், அவரை இதுவரை ஏன் நீதிமன்றில் ஆஜர்படுத்தவில்லை என்பது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு நீதவான் கட்டளையிட்டுள்ளார். கடந்த 2023-10-23 ஆம் திகதி ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியொன்றில், “வடக்கில்…
-
ஆடைகடையில் உடைமாற்றும் இடத்தில் ரகசிய கேமரா!

தலவத்துகொடையில் உள்ள ஆடை விற்பனை நிலையத்தில் உள்ள ஆடை மாற்றும் அறையில் இரகசியமாக கெமரா வைத்த கடையின் உரிமையாளரை தலங்கம காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சந்தேக நபரின் கையடக்க தொலைபேசியை ஆய்வு செய்ததில், இளம் பெண்கள் ஆடைகளை மாற்றும் 201 காணொளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட நபர் 43 வயதான கொட்டாவ, பங்களாவத்தை பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. குறித்த காணொளிகளை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு இணையதளங்களில் விற்பனை செய்தாரா என காவல்துறையினர் சந்தேகித்து வருகின்றனர். சம்பவம்…
-
கொடுக்கல் வாங்கலால் இளைஞன் கொலை

பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலான வீதிப் பகுதியில் திங்கட்கிழமை (08) இரவு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தாக்குதலின்போது, காயமடைந்து பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் துடெல்ல, கம்புருகமுவ பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. பணக்கொடுக்கல் வாங்கல் காரணமாக நபர் ஒருவர், அவரை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சடலம் பாணந்துறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக…
-
இலங்கையில் பயங்கரம்; 61 வயது கணவனை அடித்துகொன்ற மனைவி

மிஹிந்தலை, மஹகிரிந்தேகம பகுதியில் மனைவியால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கணவன் உயிரிழந்துள்ளார். ஆரம்பக்கட்ட விசாரணையில், கணவன் – மனைவிக்குள் ஏற்பட்ட குடும்ப தகராறின் காரணமாக இக் கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. உயிரிழந்தவர் மஹாகிரிந்தேகமவைச் சேர்ந்த 61 வயதான நபர் ஆவார். சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-
நாவற்காடு பகுதியில் ஆண் , பெண் கொலை

நுரைச்சோலை – நாவற்காடு பகுதியில், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆணொருவரும் இரண்டு பெண்களும், ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று (03) இரவு பதிவாகியுள்ளது. சம்பவத்தில் 38 வயதுடைய ஆண் ஒருவரும் 35 வயதுடைய பெண் ஒருவருமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. நாவற்காடு பகுதியை சேர்ந்த…
-
யாழ்.பல்கலைக்கழக 19 மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

பகிடிவதை குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் 10ம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்திற்குள் வெளியே உள்ள வீடொன்றுக்கு கனிஷ்ட மாணவர்களை அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்டுள்ளனர் . சிரேஷ்ட மாணவர்கள் 19 பேர் கடந்த மாதம் 29ம் திகதி கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று புதன்கிழமை (03)…