-
இலங்கையில் தாய், தந்தை, மகன் படுகொலை! சந்தேக நபர் அதிரடி கைது

மீரிகம, மாலதெனிய பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 80 வயதான முதியவர், அவரது 77 வயது மனைவி மற்றும் அவர்களது 42 வயது மகன் ஆகியோர் சந்தேக நபரால் அவர்களது வீட்டில் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 42 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
-
யாழ்ப்பாணத்தில் மாட்டிறைச்சிக்கு பதிலாக நாய் இறைச்சி!

யாழ்ப்பாணத்தில் உள்ள தெல்லிப்பளை எனும் குறிப்பிட்ட உணவகம் மாட்டிறைச்சிக்கு பதிலாக நாய் இறைச்சியை வழங்கியமையால் தரமற்ற உணவு என்ற குற்றச்சாட்டின் பேரில் நேற்று (17) சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தில் நேற்று முன் தினம் (15) மதியம் குறிப்பிட்ட நபர் ஒருவர் மாட்டிறைச்சி துண்டு வாங்கியுள்ளார். ஆனால் அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் ஏராளமான ரோமங்களுடன் இறைச்சித் துண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக குறித்த நபர் உடனடியாக அப்பகுதி பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவித்த நிலையிலும் அன்றைய தினம்…
-
18 வயது காதலனை கடத்திய காதலி

மஹகம – பொலேகொட பிரதேசத்தில் 18 வயது இளைஞனை கடத்திச் சென்ற சந்தேகத்தின் பேரில் 17 வயதுடைய யுவதி மற்றும் அவரது தந்தையை அகலவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (16) பிற்பகல் மஹகம பொலேகொட பிரதேசத்தில் வசிக்கும் இந்த இளைஞன் முச்சக்கரவண்டி பழுதுபார்ப்பதற்காகச் சென்ற வேளை அவர் தாக்கப்பட்டுக் கடத்தப்பட்டதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது . பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட போது இந்த இளைஞன் அவரது காதலியின் வீட்டில் இருப்பதை பொலிஸார்…
-
யாழ்ப்பாண வீதிகளில் வீசப்படும் கழிவுகள்… அசௌகரியத்திற்கு ஆளாகும் மக்கள்!

யாழ்ப்பாணத்தில் உள்ள வீதியோரங்களில் கழிவுப் பொருட்களை மக்கள் வீசிவிட்டு செல்வதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதுடன் குறித்த பகுதிகள் சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுகின்றது. அராலி – யாழ்ப்பாண வீதிகளில் நாவாந்துறைக்கு அண்மித்த பகுதி, பொம்மைவெளி, காக்கைதீவு ஆகிய பகுதிகளில் உள்ள வீதிகளிலேயே இவ்வாறு கழிவுகள் வீசப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் நேற்று (17-05-2024) ஏராளமான எலும்புகளும், கழிவுப் பொருட்களும் கொட்டப்பட்டுள்ளன. எனினும், யாழ் மாநகரசபையோ அல்லது சுகாதார பரிசோதகர்களோ அந்த இடத்தினை சுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எவற்றையும் மேற்கொள்ளவில்லை. சமீப நாட்களாக…
-
டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இரு இளைஞர்கள் கைது!

டுபாயிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்த இரு இளைஞர்களை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து 1,083 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 200 உயர் கொள்ளளவு கொண்ட பென்டிரைவ்கள் கைப்பற்றபட்டுள்ளன. டுபாயில் இருந்து இன்றையதினம் (17-05-2024) காலை குறித்த 2 இலங்கைப் பயணிகளும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதி சுமார் 50 மில்லியன் ரூபா எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
-
யாழில் குடும்ப பெண் கழுத்து நெரித்து கொலை; கணவர் கைது

யாழ்ப்பாணம் – தாளையடியில் பெண்ணொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு, கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண்ணின் கணவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுத்துறை வடக்கு தாளையடி பகுதியில் கடந்த 10 ஆம் திகதி பெண் ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு, கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டார். கடற்றொழிலுக்கு சென்று அதிகாலை வீடு திரும்பியபோது, வீட்டின்…
-
கொழும்பில் வீடொன்றில் வைத்து இளம் குடும்பஸ்தர் அடித்துக்கொலை!

ஹோகந்தர, ஹொரஹேன பிரதேசத்தில் வீடொன்றில் வைத்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்றிரவு (15-05-2024) 7.30 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நபர் ஒருவரால் தலையில் கட்டையால் தாக்கப்பட்டதில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் அத்துருகிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் ஹோகந்தர, ஹொரஹேன வீதியில் வசிக்கும் 26 வயதுடைய திருமணமான இளைஞரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் இச்சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் இன்று (16) காலை அத்துருகிரிய பொலிஸாரால்…