-
பிரசவம் பார்த்த 12 ஆம் வகுப்பு மாணவன்!

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவிற்கு அருகே அம்பேத்கர் நகரில் புக்கியா என்ற கிராமத்தில் நவஜீவன் என்ற பெயரில் தனியார் கிளினிக் ஒன்று இயங்கி வந்துள்ளது. கடந்த பிப்ரவரி 5 ஆம் திகதி பிரியங்கா என்ற 28 வயது பெண், பிரசவத்திற்காக இந்த கிளினிக்கில் அனுமதிக்கப்பட்டார். அப்பெண்ணுக்கு யோகேஷ் வர்மா (32) என்ற பி.ஏ. பட்டதாரியும் சுப்ளம் விஸ்வகர்மா (19) என்ற 12 ஆம் வகுப்பு மாணவரும் சேர்ந்து சிசேரியன் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதில் பிரியங்காவுக்கு…
-
டெல்லியில் ஒன்பது பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

டெல்லி முழுவதும் உள்ள பல முக்கிய பாடசாலைகளை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல்கள் இன்று (09) அவசரகால நடவடிக்கைகளைத் தூண்டின. இது இந்தியாவின் முக்கிய நகரங்களில் கல்வி நிறுவனங்களை மீண்டும் மீண்டும் சீர்குலைத்துள்ள நடவடிக்கையின் அண்மைய சம்பவமாகும். திங்கட்கிழமை காலை 8:30 மணி முதல் காலை 9:00 மணி வரை குறைந்தது ஒன்பது பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்ததாக கூறப்படுகிறது. டெல்லி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு படையினரும், வெடிகுண்டு அகற்றும் படையினரும் உடனடியாக குறித்த பாடசாலைகளுக்கு…
-
இணைய விளையாட்டால் மூன்று சகோதரிகள் உயிரிழப்பு

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் உள்ள ‘பாரத் சிட்டி’ குடியிருப்பு வளாகத்தில், இன்று அதிகாலை 2:15 மணியளவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. 12, 14 மற்றும் 16 வயதுடைய மூன்று சகோதரிகள், தங்கள் குடியிருப்பு தொகுதியின் 9 ஆவது மாடியிலிருந்து வரிசையாகக் குதித்துள்ளனர். பலத்த சத்தம் கேட்டு ஓடி வந்த பாதுகாவலர்களும் பெற்றோரும், அவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.…
-
சூட்கேசில் இளம் பெண்ணின் நிர்வாண சடலம்; சம்பவத்தால் அதிர்ச்சி

இந்தியாவில் பீகார் மாநிலம் ரோடாஸ் மாவட்டத்தில் உள்ள சசாராம் காய்கறி சந்தை பகுதியில், சூட்கேசில் இளம் பெண்ணின் நிர்வாண சடலம் மீடக்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கையில், சசாராம் காய்கறி சந்தை பகுதியில் சிகப்பு நிற பயணப்பை ஒன்று நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்துள்ளது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த தகவலின்பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை நடத்தினர். பின்னர் அந்த பயணப்பையை திறந்து பார்த்தபோது, அதில்…
-
விமான விபத்தில் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் உயிரிழப்பு

இந்தியாவின் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்துள்ளார். புனே மாவட்டம் பாராமதி பகுதியில் இன்று புதன்கிழமை (ஜன 28) காலை 8.45 மணிக்கு தரையிறங்க முயன்றபோது அஜித் பவார் பயணித்த விமானம் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளாகியுள்ளது. அந்த விமானத்தில் அஜித் பவார் மற்றும் அவரது பாதுகாவலர்கள் உட்பட மொத்தம் 4 பேர் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விபத்தில் சிக்கிய விமானம் முழுவதுமாக தீப்பற்றி எரிந்துள்ளது. இந்நிலையில்,…
-
காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை; தவெக உறுப்பினர் விடுதலைப்புலிகளை கைகாட்டுவது ஏன்?

நடிகர் விஜய் இன் அரசியல் கட்சியான தமிழக வெற்றிகழக உறுப்பினர் ஒருவர் விடுதலைப் புலிகள் தொடர்பில் பேசியிருந்தமை ஈழத்தமிழர்களை கொதி நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. 1990 ஆகஸ்ட் 3 இல் காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை சிங்கள் தரப்பால் அறங்கேற்றியதை மறைத்து விடுதலைப்புலிகள் மீது பழி விழுந்தது. எனினும் விடுதலைப்புலிகள் அவ்வாறான கொடூரத்தை செய்யவில்லை என்பது காத்தான்குடி இஸ்லாமிய மக்களுக்கும் தெரிந்த உண்மை. இந்நிலையில் காத்தான் குடியில் உள்ள பள்ளிவாசலில் இஸ்லாமியர்களை கொன்றுகுவித்ததாக கூறியுள்ளமை ஈழத்தமிழர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. அதேவேளை…
-
தமிழகத்தில் சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை

தமிழகத்தில் சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்கு, திருநெல்வேலி போக்சோ (POCSO) நீதிமன்றம் இன்று (24) மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. சமூகத்தையே உலுக்கிய இந்த வழக்கில் 7 மாதங்களிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி பகுதியைச் சேர்ந்த 47 வயது தொழிலாளி ஒருவருக்கு 14 வயதில் ஒரு மகள் உள்ளார். பாதுகாப்பாக இருக்க வேண்டிய தந்தையே தனது மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதில் அந்தச் சிறுமி…
-
அனில் அம்பானி மகன் மீது மோசடி வழக்கு

தொழிலதிபர் அனில் அம்பானி தலைமையிலான நிறுவனங்கள் பல வங்கிகளில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்தவில்லை என வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் (ஆர்எச்எப்எல்), யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் (முன்பு ஆந்திரா வங்கி) வாங்கிய ரூ.228 கோடி கடனை முறையாக திருப்பிச் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் திகதி, இந்தக் கடனை வாராக் கடனாக வகைப்படுத்தியது. மேலும் இது தொடர்பாக யூனியன் வங்கி சார்பில்…
-
ஜீவன் தொண்டமான் திருமணத்தில், ரணில், கனிமொழி

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், நேற்று (23) திருமண பந்தத்தில் இனைந்துக்கொண்டார். இந்தியா, தமிழ்நாடு மாநிலம் திருப்பத்தூரைச் சேர்ந்த சீதை ஸ்ரீ நாச்சியார் என்ற மணமகளை கரம்பிடித்து திருமண பந்தத்தில் இனைந்துக்கொண்டார். திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இன்றைய திருமண நிகழ்வில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட பல இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தியாவின் அரசியல், சினிமா மற்றும் வர்த்தகத் துறையைச் சேர்ந்த பிரமுகர்கள்…
-
டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த பலருக்கு காது கேட்கவில்லை

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த பலருக்கும் காது கேளாமை பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் பலியான நிலையில், அவர்களில் 8 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சம்பவத்தில் காயமடைந்தோர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 6 பேர் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவிலும், 4 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் (ICU), 4 பேர்…