Category: Uncategorized

  • பெங்களூரு விமான நிலையத்தில் போதை பொருளுடன் சிக்கிய இலங்கையர்

    பெங்களூரு விமான நிலையத்தில் போதை பொருளுடன் சிக்கிய இலங்கையர்

    இந்தியாவின் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் 45.4 கிலோ உயர்ரக கஞ்சா மற்றும் 6 கிலோ சைலோசைபின் காளான்களுடன் இலங்கையர் ஒருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் இருந்து விமானம் மூலம் உயர்ரக போதை பொருள் கடத்தி வரப்படுவதாக பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. இந் நிலையில் கடந்த 9 ஆம் திகதி மேற்கொண்ட சோதனையில் இலங்கை விமானத்தில் வந்த சந்தேகத்திற்குரிய இருவரை பிடித்து அதிகாரிகள் விசாரணை செய்தனர். அவர்கள்…

  • பிரித்தானியா பள்ளிவாசல் மீது தீ வைப்பு; வெறுப்புக் குற்றமா?

    பிரித்தானியா பள்ளிவாசல் மீது தீ வைப்பு; வெறுப்புக் குற்றமா?

    பிரித்தானியாவின் தெற்கு பகுதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் நடந்த தீ வைப்பு தாக்குதலை “வெறுப்பு குற்றம்” என ஐக்கிய இராச்சியத்தில் பொலிஸார் விசாரித்து வருவதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கிழக்கு சசெக்ஸின் பீஸ்ஹேவனில் உள்ள ஃபிலிஸ் அவென்யூவில் சனிக்கிழமை (04) இரவு 10 மணிக்கு தீ வைப்பு தாக்குதல் நடந்த இடத்திற்கு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டதாக, அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ விபத்தில் பள்ளிவாசலின் முன் நுழைவாயில் மற்றும் கார் ஒன்றும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதல்களில்…

  • யாழ் பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்

    யாழ் பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்

    தமிழ் மக்களுக்காய் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 38 வது நினைவு தினம், இன்றையதினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. தியாக தீபம் தீலிபன் நினைவேந்தல் மதியம் 12 மணிக்கு ஆரம்பித்ததுடன், பொதுச் சுடர் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து,திலீபனின் உருவப்படத்திற்கு பல்கலைக்கழக சமூகத்தினரால் மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் எனப்பலரும் கலந்துகொண்டு உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

  • பிரான்ஸில் ஆட்சி கவிழ்ப்பு

    பிரான்ஸில் ஆட்சி கவிழ்ப்பு

    தேசிய சட்டமன்றத்தில் நடத்தப்பட்ட அவநம்பிக்கை பிரேரணை மீதான வாக்கெடுப்பில் தோல்வியடைந்த பின்னர் பிரான்ஸ் பிரதமர் பிரான்சுவா பேரூ பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பிரேரணைக்கு ஆதரவாக 364 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிராக 194 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனர். இந்தநிலையில், பிரதமர் பிரான்சுவா பேரூ தலைமையிலான சிறுபான்மை அரசாங்கம் கவிழ்க்கப்பட்டுள்ளது. ஒன்பது மாதங்கள் மட்டுமே பதவியில் இருந்த பிரான்சுவா பேரூ , இரண்டு பொது விடுமுறை நாட்களை ரத்து செய்தல் மற்றும் அரச செலவினங்களை முடக்குதல் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய 44…

  • மீண்டும் விசாரணைக்கு வரும் புங்குடுதீவு மாணவி வித்தியா வழக்கு

    மீண்டும் விசாரணைக்கு வரும் புங்குடுதீவு மாணவி வித்தியா வழக்கு

    யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் மரண தண்டனை கைதிகளின் மேல் முறையீட்டை விசாரணை செய்வதற்கு உயர் நீதிமன்றம் எதிர்வரும் நவம்பர் 06ஆம் திகதிக்கு திகதியிட்டுள்ளது. புங்குடுதீவை சேர்ந்த மாணவியை கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி கடத்தி வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்டார். அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் “ட்ரையல் எட் பார்” முறையில் நீதிபதிகளான சசி மகேந்திரன் , ம. இளஞ்செழியன் மற்றும் அ.பிரேமசங்கர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்று சுவிஸ் குமார்…

  • யாழில் வீட்டு கூரையில் ஏறிய இளைஞன் மரணம்

    யாழில் வீட்டு கூரையில் ஏறிய இளைஞன் மரணம்

    யாழில் வீட்டு கூரையை சீர் செய்வதற்காக முயன்ற இளைஞர் ஒருவர் கீழே விழுந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (24) உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கு, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் வீட்டு கூரையின் மேல் உள்ள சீற்றினை சீர் செய்வதற்காக கூரையின் மேல் ஏறியுள்ளார். இதன்போது வீட்டு கூரை உடைந்து கீழே விழுந்த நிலையில் மயக்கமுற்றுள்ளார். பின்னர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா…

  • ரணில் விக்கிரமசிங்கவை விடுவிக்க வலியுறுத்தும் எரிக் சொல்ஹொய்ம்

    ரணில் விக்கிரமசிங்கவை விடுவிக்க வலியுறுத்தும் எரிக் சொல்ஹொய்ம்

    கைதான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹொய்ம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது உத்தியோகபூர்வ X தளத்தில் பதிவிட்டுள்ளமையாவது, விளக்கமறியலில் உள்ள ரணிலின் உடல்நிலை குறித்து நாம் அனைவரும் கவலைப்படுகிறோம். 2022 ஆம் ஆண்டில் நாடு பொருளாதார மற்றும் அரசியல் குழப்பம் அடைந்தபோது இலங்கையைக் காப்பாற்ற எழுந்து நின்ற தலைவர் ரணில் விக்கிரமசிங்க. ரணிலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தகுதியற்றவை. அவை உண்மையாக இருந்தாலும், ஐரோப்பாவில்…

  • யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்றிருந்த தேரர் சடலமாக மீட்பு

    யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்றிருந்த தேரர் சடலமாக மீட்பு

    யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்றிருந்த தேரர் ஒருவர், நேற்று (01) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பதுளை வீதி, பசற பகுதியைச் சேர்ந்த வனபதுலே சரணஹர என்ற தேரர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவது, கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்திருந்த தேரர், வியாழக்கிழமை (31) அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள சில இடங்களை சுற்றிப் பார்த்த பின்னர், நாக விகாரைக்கு சென்று அங்கு இரவு தங்கியிருந்தார். அடுத்த நாள் வெள்ளிக்கிழமை, அவர் சடலமாகக் காணப்பட்டதாக…

  • தகாத உறவு; மூன்று பிள்ளைகளின் தாய் வெட்டிக்கொலை

    தகாத உறவு; மூன்று பிள்ளைகளின் தாய் வெட்டிக்கொலை

    கண்டி, நாவலப்பிட்டி, இம்புல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (22) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் நாவலப்பிட்டி, இம்புல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயொருவரே கொலைசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், தனது கணவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வந்த பெண் , நபர் ஒருவருடன் கம்பளை – புஸ்ஸெல்லாவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கடந்த 9 மாத காலமாக…

  • பல்கலைக்கழக மாணவர் மாயம்

    பல்கலைக்கழக மாணவர் மாயம்

    பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள செயற்கை கடலில் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (26) காலை இடம்பெற்றுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் குழு ஒன்று ஸ்நோர்கெலிங் மற்றும் கடற்பரப்பை கண்காணிக்கும் செயல்பாட்டில் ஈடுப்பட்டிருந்தது. இதன்போது, கம்பஹாவின் அஸ்கிரிய பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். காணாமல் போன மாணவர் அணிந்திருந்தத ஸ்நோர்கெலை கடலோர பாதுகாப்பு படையின் உயிர்காப்பாளர்கள் மீட்டுள்ளனர். கொழும்பு துறைமுக பொலிஸாருக்கு…