-
கனடாவில் பெண்ணின் சடலத்தை புகைப்படம் எடுத்தவர் பணி நீக்கம்!

கனடாவில் பெண் ஒருவரின் சடலத்தை புகைப்படம் எடுத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வின்னிபெக் பொலிஸ் பிரிவில் 22 ஆண்டுகள் பணியாற்றிய ஒரு பொலிஸ் அதிகாரி, பணியில் இருந்தபோது இறந்த பெண்ணின் புகைப்படத்தை எடுத்த சம்பவத்திற்குப் பிறகு தற்போது பணியில் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி முன்பு ஊதியமின்றி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த கன்ஸ்டபிள் எல்ஸ்டன் போஸ்டாக் தற்போது அதிகாரப்பூர்வமாக பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் பொறுப்பதிகாரி ஜீன் பவேர்ஸ் தெரிவித்துள்ளார். போஸ்டாக்…
-
அகதியாக வாழ் விருப்பமில்லை ; ஜேர்மனியில் யாழ் இளைஞர் தற்கொலை

ஜேர்மனியில் யாழ்ப்பாண்ம் – ஊரெழு கிழக்கு பகுதியைச் சேர்ந்த புஸ்பராசா சுகன் வயது 25 என்ற இளைஞன் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளமி அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குறித்த இளைஞர் ஒருவர் இரண்டு வருடங்களுக்கு முன் ஜேர்மனி சென்று அங்கு அகதி முகாமில் பதிவு செய்து முகாமில் தாங்கவைக்கப்பட்டுள்ளார் . விசாஇன்மை ,வேலைஇன்மை தனிமை ,மொழிப் பிரச்சனை நண்பர்கள் இன்மை போன்ற காரணங்களினால் இளைஞர் மனவிரத்திக்குள்ளாகி அடிக்கடி குடும்பத்தினருக்கு தான் மீண்டும் ஊருக்கு வர போகின்றேன் என்று கூறி…
-
பாலியல் துஷ்பிரயோகம்; அமெரிக்காவில் இலங்கையை பேராசிரியர் கைது!

இலங்கையை பூர்வீகமாக கொண்ட சுமித் குணசேகர என்ற அமெரிக்காவின் ஃபெரிஸ் ஸ்டேட் பல்கலைக்கழகப் பேராசிரியர், அமெரிக்கக் குடிவரவு மற்றும் சுங்கச் செயலாக்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த நவம்பர் 12 ஆம் திகதியன்று டெட்ரோய்டில் அவர் கைது செய்யப்பட்டார். மரண அச்சுறுத்தல் மற்றும் பாலியல் துஷ்பிரயோக குற்றங்களுக்காக தண்டனை பெற்ற குற்ற வரலாறு இருப்பதால், இவரைக் கைது செய்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். 1998 ஆம் ஆண்டில் கனடாவில் பாலியல் குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்ற சுமித் குணசேகர,தாம் சிறுவர்…
-
லண்டனில் யாழ் இளம் குடும்பஸ்தர் கொலை; திமணமாகி ஒரு வருடத்தில் துயரம்

லண்டனில் இடம் பெற்ற கத்திக்குத்தில் யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டி பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி ஒரு வருடமான நிலையில் இத துயரச்சப்பவம் இடம் பெற்றுள்ளது கடந்த 30 ஆம் திகதி இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் . இந்நிலையில் கடந்த 3 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. கறுப்பின இளைஞர்கள் இக்கொலையுடன் தொடர்புடையவர்கள் என்றும்…
-
பிரான்ஸ் அரசாங்கத்தை ஏமாற்றிய இலங்கை தமிழ் தம்பதி

பிரான்ஸ் வொண்டி (Bondy) பகுதியில் வசித்து வந்த வவுனியாவைச் சேர்ந்த 39 வயது ஆணும், 36 வயது பெண்ணும் அரச சலுகைகளை (Benefits)ஏமாற்றிப் பெறுவதற்காக கைது செய்யப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. சட்டபூர்வமாகத் திருமணம் முடித்த இவர்கள், அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும் ‘தனிநபர் பெற்றோருக்கான’ (Single Parent) உதவித்தொகையைப் பெறுவதற்காகப் போலியாக விவாகரத்து (Fake Divorce) செய்துகொண்டனர். விவாகரத்து பெற்றதாகக் காட்டி, கணவன் ஒரு வீட்டிலும் மனைவி ஒரு வீட்டிலும் தனித்தனியாக வசிப்பதாகப் பதிவு செய்து, இருவருக்கான அரச…
-
ரில்வின் சில்வா பிரித்தானியா வருகைக்கு எதிர்ப்பு வெளியிட்டு போராட்டம்

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா நேற்று ( 23) பிரித்தானியாவுக்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்ட நிலையில் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் ஈழத்தமிழர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் என்ரூ பெட்ரிக் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா ஆகியோருக்கு இடையில் கடந்த வெள்ளிக்கிழமை முற்பகல் பத்தரமுல்ல பெலவத்தயில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் சந்திப்பு இடம்பெற்றது.…
-
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து வங்கதேச தீர்ப்பாயம் உத்தரவிட்டது. வன்முறை வழக்கில் 1,400 பேர் உயிரிழந்த வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிகப்பட்டுள்ளது. வங்க தேசத்தில் 2024ஆம் ஆண்டு இடஒதுக்கீடு தொடர்பாக நடைபெற்ற மாணவர்கள் கிளர்ச்சியின் போது, 1000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அப்போது வன்முறை சம்பவங்களும் அரங்கேறின. பிரதமர் வீடு, முக்கிய அரசு அதிகாரிகளின் வீடு சூறையாடப்பட்டது. வன்முறையை அடுத்து பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா…
-
சவுதி அரேபியாவில் கோர விபத்து; 42 இந்தியர்கள் பலி!

சவுதி அரேபியாவில் டீசல் டேங்கர் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் இந்தியவைச் சேர்ந்த 42 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு உம்ரா புனிதப் பயணம் மேற்கொண்ட பக்தர்கள் மெக்காவில் இருந்து மதீனாவுக்குச் சென்றுகொண்டிருந்தனர். இந்த நிலையில், மதீனாவுக்கு 160 கி.மீ. தொலைவில் உள்ள முஃப்ரிஹாத் என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 1.30 (இந்திய நேரப்படி) மணியளவில் டீசல் டேங்கர் லாரியின் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும்…
-
இஸ்ரேலில் இலங்கையர் ஒருவர் கொடூரமாக கொலை

இஸ்ரேலில் நேற்றிரவு இலங்கை தொழிலாளி ஒருவர் ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். டெல் அவிவ் நகரின் கடற்கரை பகுதியொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அங்குள்ள இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். கொலை செய்யப்பட்டவர் காலி, படபொல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. இவர் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேலில் கட்டுமானத் துறையில் வேலைக்காகச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் மோதலாக மாறியதன் காரணமாக,…
-
அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையைக் குறைப்பது அழிவை ஏற்படுத்தும்

அமெரிக்க கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கையைக் குறைப்பது உயர்கல்வி முறைக்கு நிதி ரீதியாக அழிவை ஏற்படுத்தும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்கு நிதி உதவி செய்வதில் வெளிநாட்டு மாணவர்களின் பங்கு முக்கியமானது. சர்வதேச மாணவர் சேர்க்கையைக் குறைப்பது பரவலான கல்லூரி மூடல்களுக்கும், பொருளாதார இழப்புக்கும் வழிவகுக்கும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு மாணவர்களை அமெரிக்காவில் படிப்பதற்கு அனுமதிப்பது, நாட்டின் உயர்கல்வி முறையை நிதி ரீதியாக வலுவாக வைத்திருக்கும் வணிக நடைமுறைக்கு…