-
மிரளவைக்கும் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு

டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனம் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களை உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க் நடத்தி வருகின்றார். அவரது வணிக நிறுவனங்களின் சந்தை மதிப்புகள் உயர்ந்து வந்த நிலையில், அவரது சொத்து மதிப்பு அசுர வளர்ச்சி கண்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. நேற்று முன்தினம் (01) மதியம் அவரது சொத்து மதிப்பு 500 பில்லியன் டொலர்களை கடந்தது. சிறிது நேரம் கழித்து 499 பில்லியன் டொலராக சற்று இறக்கம் கண்டது.…
-
ஏர் இந்தியா விமான விபத்து ; அமெரிக்காவில் வழக்கு

கடந்த ஜூன் மாதம் இந்தியா அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் உயிரிழந்த நான்கு பயணிகளின் குடும்பத்தினர், விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் மற்றும் விமான பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான ஹனிவெல் மீது அமெரிக்காவில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தவறான எரிபொருள் சுவிட்சுகள் விபத்துக்குக் காரணம் என குறிபிட்டிருந்த அவ்ர்கள் , விமானத்தின் வடிவமைப்பின் அபாயங்கள் குறித்து அறிந்திருந்தும் நிறுவனங்கள் “எதுவும் செய்யவில்லை” என்றும் குற்றம் சாட்டியது. எனினும் அமெரிக்க விமான உற்பத்தியாளர்…
-
வடகொரியாவில் ஆங்கில சொற்களுக்குத் தடை

உலக நாடுகளில் இருந்து துண்டிக்கப்பட்டு தன்னந்தனியாக தனக்கென தனித்த சட்டதிட்டங்களுடன் சர்வாதிகார ஆட்சியின் கீழ் உள்ள நாடு வட கொரியா. கடந்த நூற்றாண்டு தொட்டு ஒற்றைக் குடும்ப ஆட்சியின் கீழ் வட கொரியா இயங்கி வருகிறது. அதன் தற்போதைய ஜனாதிபதியாக கிட்டத்தட்ட மன்னராகவே கிம் ஜாங் உன் உள்ளார். வடகொரியாவின் மக்களின் வாழ்க்கை நிலை குறித்து வெளியுலகிற்கு இன்னும் புதிரானதாகவே இருந்து வருகிறது. கடுமையான கட்டுப்பாடுகளுடன் மக்கள் தங்கள் அன்றாட வாழ்நாளை கடத்தவே மிகவும் சிரமப்படுகின்றனர் என்பது…
-
ஜெனிவாவில் தமிழ் தேசியம் பேசும் அரசியலாளர்கள்

ஜெனிவாவில் ஐநா மனித உரிமைச் சபை அமர்வு இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சூழலில், சுவிஸ்லாந்து அரச ஏற்பாட்டில் ஜேவிபி எனப்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்க உறுப்பினர்கள், தமிழ்த் தேசிய கட்சிகளின் சில உறுப்பினர்கள் அங்கு சென்றுள்ளனர். யாழ் மாநகர சபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட மூத்த விரிவுரையாளர் கபிலன் மற்றும் நாடாளுமன்ற முன்னாள் தமிழ் உறுப்பினர் சுரேஸ்பிறேமச்சந்திரன் உள்ளிட்டவர்களும் பயணத்தில் இணைந்துள்ளனர். அதேவேளை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சத்தியலிங்கம் உள்ளிட்ட சிலரும் அங்கு சென்றிருக்கின்றனர்.…
-
டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர் சுட்டுக்கொலை; தேசிய துக்கமாக அனுஸ்டிப்பு

அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப்பின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட சார்லி கிர்க்(வயது 31) சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவர் இளம் வாக்காளர்களை குடியரசுக் கட்சி ஆதரவாளர்களாக மாற்றுவதில் பெரும் பங்கு வகித்தார். இவர் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து அங்குள்ள மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். அதன்படி உட்டா மாகாணத்தில் உள்ள கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சார்லி கிர்க் கலந்து கொண்டு பேசினார். அப்போது கூட்டத்தில் இருந்து ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் கழுத்தில் குண்டு பாய்ந்து சார்லி கிர்க்…
-
நேபாளத்தில் தீவிரமடைந்துள்ள போராட்டம்; விமான நிலையம் மூடல்

நேபாளத்தில் தீவிரமடைந்துள்ள போராட்டம் காரணமாக காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தின் (TIA)அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டமையை கண்டித்து நேபாளத்தில் இளைஞர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனையடுத்து அந்த தடை மீளப் பெறப்பட்ட நிலையில், பிரதமர் பதவி விலகும் வரை ஆர்ப்பாட்டம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நேபாள அரசியல் ஊழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை…
-
ஐ.நா மனித உரிமைகள் பேரவை: சர்வதேச விசாரணையை நிராகரித்தது ஜேவிபி அரசு!

விடுதலைப் புலிகளுடனான மோதலின் போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கான எந்தவொரு வெளிப்புற தலையீடு அல்லது வழிமுறைகளையும் இலங்கை நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹெரத் தெரிவித்தார். உள்நாட்டு செயல்முறைகள் மூலம் பொறுப்புக்கூறலை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றும் தெரிவித்தார். ஜெனீவாவில் இன்று நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத் தொடரின் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் இலங்கை குறித்த தமது அறிக்கையை முன்வைத்தார்.…
-
ஜெனீவா அமர்வில் கலந்துகொள்ளும் விஜித ஹேரத்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வு இன்று தொடங்கவுள்ள நிலையில் அமர்வில் பங்கேற்பதற்காக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஜெனீவாவுக்குப் புறப்பட்டதாக அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த அமர்வின் போது, இலங்கை அரசாங்கத்தின் சார்பாக அமைச்சர் ஹேரத் ஒரு சிறப்பு அறிக்கையை வழங்க உள்ளார். ஜெனீவாவில் பல மூத்த இராஜதந்திரிகளுடன் அவர் இருதரப்பு கலந்துரையாடல்களையும் நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. NPP அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆனதைத் தொடர்ந்து, மனித உரிமைகள் பாதுகாப்பு குறித்த…
-
ஹமாஸ்க்கு இதுதான் கடைசி எச்சரிக்கை

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நடந்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஹமாஸ்க்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் மூண்ட நிலையில், ஹமாஸை அழிப்பதாக சபதம் ஏற்ற இஸ்ரேல், காசா மீது தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் ஹமாஸ் அமைப்பினர் மட்டுமல்லாமல் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவின் தலையீட்டின்பேரில் தற்காலிக போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டு பணையக் கைதிகள் பரிமாற்றம் செய்யப்பட்டனர். பின்னர்…
-
குண்டு துளைக்காத ரயிலில் சீனா சென்ற வடகொரிய அதிபர்

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், குண்டு துளைக்காத சிறப்பு ரயில் மூலம் சீனாவுக்குச் சென்றுள்ளார். திங்கட்கிழமை (1) இரவு வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங்கில் இருந்து புறப்பட்ட அவர், இன்று சீனா சென்றடைந்தார். இரண்டாம் உலகப் போரில் ஜப்பானுக்கு எதிராக சீனா வெற்றி பெற்றதன் 80ஆவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு, சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெறும் இராணுவ அணிவகுப்பில் கலந்துகொள்ளவே கிம் ஜாங் உன் அங்கு சென்றுள்ளார். இந்த இராணுவ அணிவகுப்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்…