-
ஆப்கானிஸ்தானில் நள்ளிரவில் உலுக்கிய நிலநடுக்கம்; 600க்கும் மேற்பட்டோர் பலி

கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை (31) அன்று 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் சுமார் 1,000க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்தனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை (31) இரவு 11.47 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் நகங்கர் மாகாணம் ஜலாலாபாத்தை மையமாக கொண்டு 8 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவானது.நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள்…
-
அமெரிக்காவில் கழித்த மலத்தை கையோடு ரஷ்யாவுக்கு கொண்டு சென்ற புடின்

அமெரிக்கா சென்ற ரஷ்ய அதிபர் புதினின் மலத்தை அதிகாரிகள் சூட்கேஸில் பத்திரமாக எடுத்துச் சென்ற சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து போர் நடந்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த போரை நிறுத்த தொடர்ந்து இரண்டு நாடுகளிடையேயும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஆனால் அதற்கு இடையேவும் அமெரிக்கா தொடர்ந்து ரஷ்யாவிற்கு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்நிலையில் உக்ரைனுடனான போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ட்ரம்ப்…
-
இங்கிலாந்தில் இலங்கைப் பெண் கொலை

இங்கிலாந்து தெற்கு வேல்ஸ் நகரம் கார்டிஃப் பிரதேசத்தில் வசிக்கும் இலங்கைப் பெண் ஒருவர் கடந்த 21 ஆம் திகதி கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 32 வயதுடைய நிரோதா கல்பனி நிவுன்ஹெல்லா என தெரியவந்துள்ளது. சம்பவ தினமான 21 ஆம் திகதி அன்று அந்நாட்டு நேரப்படி காலை 7.37 மணியளவில் கார்டிஃப் பகுதியில் உள்ள ஒரு வீதியில் குறித்த பெண் பலத்த காயங்களுடன் விழுந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அவசர உதவியாளர்கள் அவரது உயிரைக் காப்பாற்ற தீவிரமாக முயன்ற…
-
அமெரிக்காவின் மரியாதைக்குரிய நீதிபதி பிராங்க் கேப்ரியோ காலமானார்

உலகெங்கும் வாழும் மக்கள் இதங்களை வென்ற மனிதநேயமான நீதிபதியாக அறியப்படும் அமெரிக்காவின் மரியாதைக்குரிய நீதிபதி பிராங்க் கேப்ரியோ காலமானார். கணையப் புற்றுநோயுடன் நீண்ட காலமாக போராடி வந்த அவர், நேற்று (20) தமது 88 ஆவது வயதில் காலமானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் ரோட் தீவு மாநிலத்தில் தலைமை நீதிபதியாக பணியாற்றிய அவர், விசாரணைகளில் அன்பு மற்றும் கருணைக்காக உலகம் முழுவதும் பேசப்பட்டார். நீதிபதி பிராங்க் கேப்ரியோ தனது மனிதாபிமான தீர்ப்புகளுக்காகவும், தனக்கென தனித்துவமான நீதி…
-
ஜனாதிபதியான 20 வயது இளைஞன்!

அவுஸ்திரேலியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர், ‘வெர்டிஸ்’ என்ற சிறிய நாட்டை உருவாக்கி அதன் ஜனாதிபதியாகியுள்ளார். குரோஷியா மற்றும் செர்பியாவுக்கு இடையில், டானூப் நதிக்கரையில் அமைந்துள்ள 125 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தில், “வெர்டிஸ் குடியரசு” என்ற புதிய நாட்டை டேனியல் ஜாக்சன் என்ற அந்த 20 வயது அவுஸ்திரேலிய இளைஞர் உருவாக்கி, தன்னை அதன் ஜனாதிபதியாக அறிவித்துள்ளார். இந்த நிலப்பகுதிக்கு எந்த நாடும் உரிமை கோரவில்லை என்பதை அறிந்து, 2019 ஆம் ஆண்டு மே 30 ஆம் திகதி…
-
பிரான்ஸ் பிரிட்டனை தொடர்ந்து கனடாவும் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க தீர்மானம்

பிரான்ஸ் பிரிட்டனை தொடர்ந்து கனடாவும் எதிர்வரும் ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தின் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கப்போவதாக தெரிவித்துள்ளது. எனினும் இந்த நடவடிக்கை ஜனநாயக சீர்திருத்தங்களிலேயே தங்கியுள்ளது என தெரிவித்துள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி ஹமாஸ் இல்லாமல் அடுத்தவருடம் பாலஸ்தீன அதிகாரசபைக்கு தேர்தலை நடத்தவேண்டும் என தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தில் கனடா உத்தியோகபூர்வமாக பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் யூதகுடியேற்றங்கள் விஸ்தரிப்பு,காசாவில் மோசமடைந்துவரும் நிலைமை ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ்…
-
ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கியிலிருந்து சுமார் 85 மைல் தொலைவில், 19 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த மையம் மேலும் குறிப்பிட்டுள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஹவாய் மற்றும் அலாஸ்காவின் அலூடியன் தீவுகளின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், ஜப்பானின் கடலோரப்…
-
நிமிஷா பிரியா மரண தண்டனை இரத்தா?

ஏமனில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த தாதியர் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த நிமிஷா பிரியா, கடந்த 2017ஆம் ஆண்டு தலால் அப்தோ மஹ்தி என்பவரை கொலை செய்ததாகக் கூறப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரணை செய்த ஏமன் நீதிமன்றம், 2020ஆம் ஆண்டு அவரை கொலைக் குற்றவாளியாக அறிவித்து மரண தண்டனை விதித்தது. இந்நிலையில், பேச்சுவார்த்தைகளில் பங்கேற்ற முஸ்லிம்…
-
உடனடி யுத்தநிறுத்தத்திற்கு இணங்கிய தாய்லாந்தும் கம்போடியாவும்!

தாய்லாந்தும் கம்போடியாவும் சமாதான பேச்சுவார்த்தைகளின் பின்னர் உடனடி நிபந்தனையற்ற யுத்தநிறுத்தத்திற்கு இணங்கியுள்ளன. இன்று நள்ளிரவு முதல் யுத்தநிறுத்தம் நடைமுறைக்குவரும் என மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைதியை ஏற்படுத்துவதை நோக்கிய முதலாவது முக்கியமான நடவடிக்கை இது என அவர்தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடனான வர்த்தகத்திற்கான முன்நிபந்தனையாக இரண்டு நாடுகளும் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்தே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
