வாட்ஸ் அப் கால் மூலம் மோசடிகள் நடப்பதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாட்ஸப் கால் மூலமாக சைபர் குற்றவாளிகள் தொலைத்தொடர்பு துறையில் இருந்து பேசுவதாக கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர் . இதுகுறித்து மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் தொலைத்தொடர்பு துறையில் இருந்து பேசுவதாக கூறி ஒருவருக்கு கால் செய்து அவர்கள் சொல்வதைக் கேட்காவிட்டால் மொபைல் எண்ணை துண்டிக்கப்படும் என்று மிரட்டுகின்றனர் குறிப்பாக +92 போன்ற வெளிநாட்டு எண்களில் இருந்து whatsapp அழைப்புகள் வருகின்றன என தொலைத்தொடர்பு துறை தெரிவித்துள்ளது .
இது போன்ற போலியான போன் கால் வரும் பொழுது அவர்களிடம் எந்தவித தகவல்களையும் பகிர வேண்டாம் என்று தொலைத்தொடர்பு துறை கேட்டுக் கொண்டுள்ளது . மேலும் இது போன்ற போலியான அழைப்புகள் வந்தால் www.sancharsaathi.gov.in என்ற இணையதளம் மூலம் புகார் அளிக்கலாம் என்று தொலைத்தொடர்புத் துறை தெரிவித்துள்ளது அல்லது www.cybercrime.gov.in இணையதளத்திலும் புகார் அளிக்கலாம் .
மத்திய அரசு வெளியிட்டுள்ள எச்சரிக்கை…!

Visited 9 times, 1 visit(s) today