செல்போன் டவர்கள் இல்லாமல் நேரடியாக செயற்கை கோள் மூலமாக ஸ்மார்ட் போன்களில் பேசும் வசதியை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர் .
சீன பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் உலகின் முதல் செயற்கைக்கோளை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர் . இது மொபைல் டவர்களுக்கு பதிலாக ஸ்மார்ட்போன்கள் நேரடியாக அழைப்பை மேற்கொள்ள உதவுகிறது . மேலும் இந்த செயற்கைக்கோளை டியான்டாங்-1 என அழைக்கின்றனர் .
டியான்டாங்-1 முதல் செயற்கைக்கோள் ஆகஸ்ட் 6, 2016 அன்று ஏவப்பட்டது இரண்டாவது மற்றும் மூன்றாவது செயற்கைக்கோள்கள் 2020 மற்றும் 2021 இல் ஏவப்பட்டது . கடந்த ஆண்டு செப்டம்பரில் , Huawei – Tiantong செயற்கைக்கோள்களுடன் நேரடியாக இணைப்பதன் மூலம் செயற்கைக்கோள் அழைப்புகளை ஆதரிக்கும் உலகின் முதல் ஸ்மார்ட்போனை வெளியிட்டது . Xiaomi, Honor மற்றும் Oppo உள்ளிட்ட பிற சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களும் மாதிரிகளை அறிமுகப்படுத்தியுள்ளனர் . தரையில் உள்கட்டமைப்பு இன்றி நேரடியாக செயற்கை கோள் மூலமாகவே பேச முடியும் . இதனால் இயற்க்கை சீற்றங்கள் ஏற்படும் பொழுது எளியமுறையில் உதவி கேட்டுக்கொள்ளலாம் .
புதிய செயற்கைக்கோளை உருவாக்கி சாதனை படைத்துள்ளது சீனா

Visited 4 times, 1 visit(s) today