மட்டக்களப்பில் போராட்டகாரகள் – பொலிஸார் முறுகல்!


மட்டக்களப்பில் சுதந்திர தினத்தையிட்டு கல்லடி பாலத்தில் இருந்து காந்தி பூங்காவரை , இன்று சென்ற கரிநாள் எதிர்ப்பு ஆர்ப்பாட பேரணியை , கோட்டமுனை பாலத்தில் வைத்து பொலிசார் தடுத்து நிறுத்தியதையடுத்து பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே முறுகல் நிலையடுத்து அங்கு வீதியில் அமர்ந்திருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் காணாமல் போன உறுவுகள் சங்கம் பொது அமைப்புக்கள் கரிநாள் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.

இதனையடுத்து மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் காணாமல் போண உறவுகள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒன்றிணைந்தனர்.

அரசுக்கு எதிரான சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு காந்தி பூங்காவை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

காந்தி பூங்காவில் சுதந்திர தின நிகழு இடம்பெற்றதால் மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள முக்கிய சந்திகளில் பொலிசார் மற்றும் கலகம் அடக்கும் பொலிசார் பலத்த பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்ட வந்தனர்.

இந் நிலையில் , கோட்டமுனை பாலத்தில் வைத்து ஆர்ப்பாட்டகாரர்களை பொலிசார் காந்தி பூங்காவிற்கு செல்ல முடியாது என பொலிசார் தெரிவித்து தடுத்து நிறுத்தினர்.

இதனையடுத்து ஆர்ப்பாட்டகார்கள் , , பொலிசாரின் தடுப்பை மீறி செல்ல முற்பட்டதையடுத்து பொலிசாருக்கும் ஆர்பாட்டகார்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து கலகம் அடக்கும் பொலிசார் வரவழைக்கப்பட்டு ஆர்ப்பாட்டகாரர்களை தடுத்து நிறுத்தியதையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்

Visited 1 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *