தையிட்டி விகாரையை இடிப்பது இனவாதமாம்


யாழ்ப்பாணம் தையிட்டி விகாரையை இடிப்பது இனவாதத்தை கட்டியெழுப்பும் ஆகவே தான் அதை இடிக்க வேண்டாமென ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் கோரியதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

எந்தவொரு கோவில் மற்றும் விகாரை இடிக்கப்பட்டாலும் அது கலவரத்தை தூண்டக்ககூடிய விடயமாக மாறும், சிலர் அதை உடைத்ததெறிய வேண்டும் என தெரிவித்துக்கொண்டிருக்கின்றார்கள்” எனவும் அவர் கூறினார்.

இதனிடையே தையிட்டி விகாரை பிரச்சனையை தாம் ஆறு மாத காலத்திற்குள் தீர்த்து வைப்போம் என சிவசேனை அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையில் மக்களின் காணி மக்களுக்கே என்பதில் நாமும் உறுதியாக இருக்கிறோம். அது தொடர்பில் தையிட்டி விகாரை அமையப்பெற்றுள்ள காணி உரிமையாளர்களுடன் நாம் பேசவுள்ளோம்.

அவர்களுடன் பேசிய பின்னர் விகாராதிபதியுடனும், பௌத்த மத தலைவர்களுடன் பேசி, விகாரை தொடர்பான பிரச்சினையை முடிவுறுத்துவோம்.

அதற்கு எமக்கு குறைந்தது 06 மாத காலமாவது வேண்டும். அதற்குள் தமது அரசியலை செய்ய முயன்று அதனை குழப்ப வேண்டாம் என கோருகிறோம் என ஈழம் சிவசேனை அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

Visited 5 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *