ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லட்சம்பர்க் நாடு போக்குவரத்து நெருக்கடியை சரி செய்யும் வகைகளும் மக்களுக்காக இலவச போக்குவரத்து சேவையை வழங்கியுள்ளது. அரசாங்கம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
உலகிலேயே இலவச போக்குவரத்து சேவை வழங்கிய நாடு என்ற பெருமையை லட்சம்பர்க் நாடு பெற்றுள்ளது. லட்சம்பர்க் நாட்டில் பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்ட நிலையில் அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
லட்சம்பர்க் நாட்டில் சுமார் 32 சதவீத மக்கள் மட்டுமே பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து பொதுக் போக்குவரத்து பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கத்திலும் நாட்டில் ஏற்பட்ட அதிகப்படியான போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கத்திலும் அரசாங்கமானது இலவச போக்குவரத்து சேவையை தற்பொழுது கொண்டு வந்துள்ளது. இந்த இலவச போக்குவரத்து தேவையானது கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
