முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!


முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு சொந்தமானதாக கூறப்படும் சொகுசு வாகனம் நட்சத்திர ஹோட்டல் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அவரை எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் சொகுசு வாகனம் ஒன்றை வைத்திருந்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) அவர் கைது செய்யப்பட்டு இன்று மாலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

ஹில்டன் ஹோட்டலின் தரிப்பிடத்தில் சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தப்பட்டு கைவிடப்பட்டிருந்த சொகுசு கார் தொடர்பில் வாக்குமூலங்களைப் பெற ஜோன்ஸ்டன்பெர்னாண்டோ சமூகமளிக்காத நிலையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அதன் பின்னர் வாக்குமூலம் வழஙக் சென்றபோது ஜோன்ஸ்டன்பெர்னாண்டோ கைது செய்யப்பட்டார்.

Visited 11 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *