கேரள கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து பலர் காயம்


கேரள மாநிலத்தின் காசர்கோடு மாவட்டத்தில் நேற்று (28) இரவு நடைபெற்ற கோயில் திருவிழாவில் மிக மோசமான பட்டாசு விபத்து ஏற்பட்டது.

இதில் 150க்கும் மேற்பட்டோர் காயமடிந்துள்ளதோடு, அவர்களில் எட்டு பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுக்கடங்காத பட்டாசு வெடிப்புகளையும் கொழுந்துவிட்டு எரியும் தீயையும் காட்டும் காணொளிகள் இணையத்தில் வலம் வந்திருந்தன.

கேரளாவில் கொண்டாடப்படும் தெய்யம் விழாவின் தொடக்கமாக அஞ்சுதாம்புலம் வீரக்காவு அனுசரிக்கப்படுகிறது.

அந்தச் சடங்கின்போது இப்பட்டாசு விபத்து நிகழ்ந்ததாகக் கேரள ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நள்ளிரவு நேரத்தில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதாகவும் அப்போது பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த கொட்டகைக்குள் தீமூட்டப்பட்ட பட்டாசு தவறுதலாக விழுந்திருக்கக்கூடும் என்றும் சம்பவத்தை நேரில் கண்டோர் கூறினகூறியுள்ளனர்.ர்.

அந்தக் கொட்டகைக்கு அருகில் பலர் நின்றுகொண்டிருந்ததாகவும் கூட்ட நெரிசலாக இருந்ததால் அவர்களால் அங்கிருந்து விரைவாகத் தப்பிச் செல்ல முடியவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Visited 19 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *