ஸ்பெய்னில் அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் நால்வர் பலி


ஸ்பெய்ன் தலைநகர் மாட்ரிட்டில் கட்டுமானத்தில் இருந்த அடுக்குமாடிக் கட்டிடம் பகுதியளவு இடிந்து விழுந்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

காணாமல் போனதாகக் கூறப்படும் இரண்டு பேரின் உடல்கள் புதன்கிழமை (08) அதிகாலை கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டதாக மாட்ரிட்டின் அவசர சேவைகள் எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது.

ஸ்பெயினின் செய்திச் சேவையின் தகவலின்படி, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் மாலி, கினியா மற்றும் எக்குவாடோர் நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களும் அடங்குவர்.

அனர்த்தத்தில் குறைந்தது மூன்று பேர் காயமடைந்த நிலையில் அவர்களில் ஒருவர் கால் எலும்பு முறிவுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

நான்கு நட்சத்திர ஹோட்டலாக மாற்றுவதற்காக புதுப்பிக்கப்பட்டு வந்த அந்தக் கட்டிடத்தில் சுமார் 30-40 பேர் பணிபுரிந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்கான காரணம் வெளியாகத நிலையில் , விசாரணைகளை மார்ட்டின் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Visited 2 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *