தேவர்களின் குருவாகவும் நவகிரகங்களின் நாயகனாகவும் விளங்கக்கூடியவர் குரு பகவான். மேஷ ராசியில் பயணம் செய்து கொண்டிருந்த குரு பகவான் கடந்த மே 1ஆம் தேதி முதல் ரிஷப ராசியில் அடி எடுத்து வைத்துள்ளார். ஜோதிட ரீதியாக நவகிரகங்களின் குரு பகவானின் பெயர்ச்சியானது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.
குருபகவான் வருகின்ற அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி ரிஷப ராசியில் வக்ர நிலையை அடைகிறார். இதை தொடர்ந்து அதிர்ஷ்ட மழையில் நனைய போகும் நான்கு ராசிக்காரர்களை பற்றி பார்ப்போம்.
ரிஷப ராசி
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் முழுவதும் மிகவும் சிறந்த வருடமாக அமையும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி நிச்சயம் கிடைக்கும். போகும் இடம் எல்லாம் பேரும் புகழும் கிடைக்கும் காலமாக இந்த காலம் இருக்கும். புது வீடு, வாகனம், பொன் பொருள் அமையும் காலமாக இந்த குரு பெயர்ச்சி காலம் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப் போகிறது.
கடக ராசி
கடக ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியானது பதவி உயர்வு, செய்யும் தொழிலில் முன்னேற்றம் போன்ற செல்வநிலையை தரக்கூடிய காலமாக அமையப் போகிறது.
மிதுன ராசி
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியானது வெளிநாடு செல்லும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். புதிய தொழில் தொடங்கும் காலநிலையை ஏற்படுத்தும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி வரும் காலமாக இது அமையும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
சிம்ம ராசிக்காரர்கள்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி ஆனது அதிர்ஷ்டத்தை கொடுக்கும் காலமாக அமையும். நினைத்த காரியங்கள் கைக்கூடி வரும். நீண்ட நாட்களாக தடைப்பட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடங்களில் புகழ்பெருகும். வருமானத்தை அதிகரிக்கும் வாய்ப்புகள் வந்த வண்ணம் காணப்படும்.
