மிஹிந்தலை, மஹகிரிந்தேகம பகுதியில் மனைவியால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கணவன் உயிரிழந்துள்ளார்.
ஆரம்பக்கட்ட விசாரணையில், கணவன் – மனைவிக்குள் ஏற்பட்ட குடும்ப தகராறின் காரணமாக இக் கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
உயிரிழந்தவர் மஹாகிரிந்தேகமவைச் சேர்ந்த 61 வயதான நபர் ஆவார்.
சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Visited 4 times, 2 visit(s) today
