பிரம்மாண்ட படைப்புகளை கொடுக்கும் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் பல பிரபலமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த்த, ராகுல் ப்ரீத் சிங் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தை லைக்கா ப்ரொடக்சன் மற்றும் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உருவாகி வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இந்தியன் 2 திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசை அமைப்பதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியன் டு திரைப்படம் வருகின்ற ஜூன் 13ஆம் தேதி தியேட்டர்களில் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை பட குழுவினர் அறிவித்துள்ளனர்.
இப்படத்திற்கான ஆடியோ லான்ச் இந்த மாதம் நடைபெற இருப்பதாகவும் மிகப்பிரமாண்டமான முறையில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கான ஆடியோ லாஞ்சுக்கு தலைமை விருந்தினராக பல முன்னணி நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அதன்படி நடிகர் ரஜினிகாந்த் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் ராம்சரண் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
