இஷாரா செவ்வந்திக்கு உதவியோர்; யாழில் பலர் கிடுக்கிப்பிடியில்


இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்லப் பயன்படுத்திய படகு அராலித்துறை கடற்கரைப் பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல உதவினார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஆனந்தன் என்பவரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் குறித்த படகு மீட்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து வந்த விசேட பொலிஸ் குழுவினரே படகினை மீட்டுள்ளதாகவும் , படகின் வெளியிணைப்பு இயந்திரம் மீட்கப்படவில்லை எனவும், படகின் உரிமையாளரை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை செவ்வந்தி தொடர்பிலான வழக்கு விசாரணைகளை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள பொலிஸ் விசேட குழுவினரே தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் , செவ்வந்தியை இந்தியாவிற்கு அழைத்து சென்ற நபர்கள் ,

தப்பி செல்ல பயன்படுத்திய படகின் உரிமையாளர் , யாழ்ப்பாணத்தில் செவ்வந்தி தங்கியிருப்பதற்கு இடமளித்தோர் , அதற்கான ஏற்பாடுகளை செய்தோர் என பல்வேறு தரப்பினர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளையும் பொலிஸ் விசேட குழுவினரே முன்னெடுத்து வருவதாக பொலிஸ் தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

Visited 2 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *