யாழில். வைத்தியசாலை சென்று வீடு திரும்பியவர் திடீர் மரணம்


ஒருநாள் காய்ச்சல் நிமோனியா தொற்றானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் , கைதடியை சேர்ந்த சிவபாலசிங்கம் காந்தரூபன் (வயது 42) என்பவரே உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் புதன்கிழமை திடீரென காய்ச்சலும் வயிற்றோட்டமும் ஏற்பட்டதால் புத்தூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

வீடு திரும்பியவர் , கதிரையில் அமர்ந்திருந்த நிலையில் , திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் , நிமோனியாவினால் மரணம் சம்பவித்துள்ளதாக மரண விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Visited 5 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *