யாழ் கல்லுண்டாய் 25 ஆயிரம் ரூபா விவகாரம்; 18 வீடுகளுக்கு நிவாரணம்


யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியை சேர்ந்த குடும்பத்திற்கு மறுக்கப்பட்ட 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி , அவர்களுக்கு வழங்க முடியும் என பிரதேச செயலர் மனிதவுரிமை ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

கல்லுண்டாய் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய மாணவன் தனது குடும்பத்திற்கு 25ஆயிரம் ரூபாய் நிதியுதவி கிடைக்கப்பெறவில்லை என மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்திருந்தான்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் , 25ஆயிரம் ரூபாய் நிதி தனி நபருக்காக ,அல்லது வீட்டிற்கா என்பது தொடர்பில் எழுத்து மூலம் விளக்கமளிக்குமாறு கோரி இருந்தார்.

அதன் அடிப்படையில் , பிரதேச செயலரால் மனிதவுரிமை ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையிலையே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நவாலி கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் வெள்ளநீர் வீட்டுக்குள் உட்புகுந்த வீட்டிற்கு அரசினால் வழங்கப்படும் Rs .25,000.00 ரூபா நிவாரணம் வழங்கப்படாமை தொடர்பான முறைப்பாட்டுக்கு சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்பிரகாரம் முறைப்பாட்டாளர் உட்பட்ட 18 வீடுகளுக்கான சேதவிபரம் சிபாரிசு செய்யப்பட்டு அரசாங்க அதிபர் அவர்களுக்கு நிதி ஒதுக்கீட்டுக்காக அனுப்பப்பட்டுள்ளது என்றும் முறைப்பாட்டாளரோ அல்லது அவரது பிரதிநிதியோ நேரில் சமூகமளிக்கும்போது வெள்ளநிவாரணம் தொடர்பான சுற்றுநிருபங்கள் மற்றும் நிதிப்பிரமணம் என்பவற்றின்படி முறைப்பாட்டாளருக்கான கொடுப்பனவை வழங்கமுடியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முறைப்பாட்டாளர் தொலைபேசிமூலம் தொடர்புகொண்டபோது நேரில் வந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு கொடுப்பனவை பெற்றுக்கொள்ளும்படி பிரதேச செயலாளரால் முறைப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Visited 1 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *