நடிகை ஜோதிகா தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளின் இவரும் ஒருவர். கடந்த சில வருடங்களாகவே நடிகை ஜோதிகா சினிமா துறையில் பிஸியாக இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்துள்ள சைத்தான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று 100 கோடிக்கு மேல் வசூல் செய்த சாதனை படைத்துள்ளது.
ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ஸ்ரீகாந்த் என்ற படத்திற்கு செய்தியாளர்களிடையே நடிகை ஜோதிகா படத்தைப் பற்றிய சில தகவல்களை பகிர்ந்து உள்ளார். அப்பொழுது செய்தியாளர்கள் தரப்பிலிருந்து ஜோதிகாவிடம் சமூகப் பொறுப்பு பற்றி பேசுகிறீர்கள் ஆனால் வாக்களிக்க வராததற்கு காரணம் என்ன என்று கேள்வி எழுப்பினர்.
என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்த ஜோதிகா சிறிது நேரம் கழித்து வெளியூரில் இருந்ததாகவும் வரமுடியாத சூழலினால் மட்டுமே வாக்களிக்க முடியவில்லை என்று பதில் அளித்துள்ளார். ஆன்லைன் மூலமாக கூட ஓட்டு போடுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் சில விஷயங்களை பொதுவெளியில் சொல்லக்கூடாது என்றும் பதிலளித்துள்ளார்.
