தாயின் காதலனால் கர்ப்பமான கல்முனை மாணவி


அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றின் கனிஷ்ட பிரிவில் கல்வி கற்று வந்த மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டு கர்ப்பமான சம்பவம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தையாரால் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கமைய இச்சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பெண்கள் சிறுவர் பிரிவு பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பாடசாலைக்கு இரண்டு மாதங்களாக செல்லாத குறித்த மாணவி தொடர்பாக பாடசாலை நிர்வாகம் அவரது தாயாரிடம் வினவியதாகவும் உரிய பதில் இன்மை காரணமாக தாயார் கூறிய முரண்பாடான பதில்களில் சந்தேகம் காணப்பட்ட நிலையில் தற்போது மாணவியின் தந்தை குறித்த விடயம் அறிந்து பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையான பாதிக்கப்பட்ட மாணவி அவரது தயார் தகாத உறவில் இருந்த நபரினால் பாலியல் வல்லுறவிற்கு உட்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த சம்பவத்திற்கு உடந்தையான மாணவியின் தாயார் கைது செய்யப்பட்ட நிலையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மாணவியின் பெற்றோர் விவாகரத்து ஆகிய நிலையில் பிரிந்து வாழ்கின்றதாக தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தலைமறைவாகியுள்ள சந்தேக நபரை கல்முனை பொலிஸார் தேடி வருகின்றனர்.

Visited 2 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *